நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் மாநாடு படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நான் பார்த்தவரைக்கும் #Maanaadu படம் @SilambarasanTR_ க்கும், @vp_offl க்கும் ஒரு மைல்கல்லாக அமையும். இருவருக்கும், உடன் பணிபுரிந்த நடிகர்கள்.. தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்💐@iam_SJSuryah @kalyanipriyan @Richardmnathan @thisisysr @johnmediamanagr pic.twitter.com/ysLYKdUbQv
— sureshkamatchi (@sureshkamatchi) April 11, 2021
இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு ‘மாநாடு படம் சிம்புவுக்கும் வெங்கட் பிரபுவுக்கும் ஒரு மைல்கல்லாக அமையும். இருவருக்கும் உடன் பணிபுரிந்த நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார். தற்போது அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.