Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

1000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு… கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா… மகிழ்ச்சியில் பொது மக்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருநல்லூர் குளத்தில் மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருநல்லூர் கிராமத்தில் பெரிய குளம் ஒன்று உள்ளது. அந்த குளத்தில் அதிக அளவில் மீன்கள் இருப்பதால் குளத்தில் மீன்பிடி திருவிழா நடத்த ஊர் பொது மக்கள் ஒன்று கூடி முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் மீன்பிடி திருவிழா பற்றி தகவலறிந்த கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு மக்கள்  மீன்பிடித் திருவிழாவில் கலந்து கொள்ள திருநல்லூருக்கு வந்துள்ளனர்.

இதனையடுத்து திருநல்லூர் கிராமத்தின் ஊர் தலைவர்கள் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்த பினபு மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து 1000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சேலை, வேட்டி, மற்றும் மீன்வலையை பயன்படுத்தி குளத்தில் இறங்கி மீன்களைப் பிடித்து அதனை தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Categories

Tech |