Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் மரணம்…. அவர் வலிகளுடன் இறக்க வேண்டும்…. கருத்து தெரிவித்த இளம்பெண்….!!

இளவரசர் பிலிப் மரணம் குறித்து இளம்பெண் வெளியிட்ட ட்விட்டர் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமான அதிகாரப்பூர்வ தகவலை ராஜ குடும்பம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதில் இளவரசர் அமைதியான முறையிலும், நிம்மதியான முறையிலும் காலமானார் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த பதிவுக்கு கனடாவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் க்ரீன்கியர் என்பவர் தெரிவித்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் இளவரசர் அமைதியான முறையில் இறந்தது வருத்தம் அளிக்கிறது என்றும் அவர் வலிகளுடன் இறந்திருக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தார். இந்த கருத்து 17,௦௦௦ லைக்குகள் பெற்று வைரலானது.

இந்த பதிவிற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கிரீன் எந்த ஒரு மன்னிப்பையும் வெளியிடவில்லை. மக்கள் அனைவரையும் உங்களது வேலை பார்க்க வேண்டும் என கடுமையாக திட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் அவர் பத்திரிக்கை மீது நடவடிக்கை என்று எடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். இதுகுறித்து பத்திரிக்கை செய்தி தொடர்பாளர் கார்டியன் கூறுகையில் க்ரீன் எங்களது பத்திரிக்கையில் எழுத்தாளர் கிடையாது என்றும் அவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன் எங்கள் பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதினார் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |