நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 6,618 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு 9,33,434 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 22 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 12,908 ஆகவும், 2,314 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 8,78,571 ஆகவும் உயர்ந்துள்ளது. 41,955 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.