உடல் ஊனமுற்ற மற்றும் மரணமடைந்த ராணுவ வீரர்களுடைய மனைவிகளின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார்.
உடல் ஊனமுற்ற மற்றும் மரணமடைந்த ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய உதவி தொகையை பெறுவதற்கு போராட்டங்களில் ஈடுபட வேண்டிய தேவையில்லை என்று பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ண தெரிவித்துள்ளார். மேலும் அவர்களுடைய கோரிக்கையை பூர்த்தி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்துள்ளன என்றும் தெரிவித்திருக்கிறார்.
அதாவது ஊனமுற்ற மற்றும் மரணமடைந்த ராணுவ வீரர்களின் மனைவிகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டட வளாகத்தில் சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் கணவனை இழந்தவர்களும், தங்கள் கணவருக்கு 55 வயது பூர்த்தியான பின்பு ஓய்வூதியம் வழங்கப்படுவதற்கு மாற்றாக ஊதியத்தை வழங்குமாறு கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை பூர்த்தி செய்வது எளிதல்ல. என்றாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி சுமார் ஓராண்டு முயற்சிக்கு பின்பு அவர்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது குறித்து கமல் குணரட்ண தெரிவித்துள்ளதாவது, அமைச்சரவை ஆலோசனையில் நான் பாதுகாப்பு செயலாளராக கையெழுத்திட்டுள்ளேன். மேலும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சேவும் அமைச்சராக கையெழுத்திட்டார் என்று கூறியுள்ளார்.