நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள லிப்ட் படத்தின் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் கவின். இதை தொடர்ந்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்துகொண்டு அதிகளவு பிரபலமடைந்தார். மேலும் இவர் நட்புனா என்ன தெரியுமா, சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் கவின் நடிப்பில் இயக்குனர் வினித் வரப்பிரஸாத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லிப்ட். இந்த படத்தில் பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
.#Lift pic.twitter.com/0SdKbLfXZY
— Kavin (@Kavin_m_0431) April 11, 2021
எக்கா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது . விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.