சப்போட்டா பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த பழம் செரிமானத்துக்கு உதவுவது மட்டுமல்லாமல் அதிக அளவு குளுக்கோஸ் இருப்பதன் காரணமாக நம்முடைய உடலுக்கு ஆற்றலை வழங்கி வருகிறது.
இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துகள் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை கொடுக்கிறது.
சப்போட்டா பழம் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு குடல் புற்று நோய் ஏற்படாது. இதில் கால்சியம் பாஸ்பரஸ் சத்து கணிசமாக உள்ளது. இதனால் எலும்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
சப்போட்டா பழம் வைட்டமின் ஏ வை அதிகளவு கொண்டுள்ளது. இதனால் வயதான காலத்தில் கூட பார்வையை மேம்படுத்த உதவுகிறது. எனவே சப்போட்டா பழம் சாப்பிட்டால் நல்ல கண் பார்வை கிடைக்கும்.
இதை அடிக்கடி சாப்பிட்டு வருவதால் சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர் கற்களை வெளியேற்ற உதவுகிறது.
சப்போட்டா பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் சரிசெய்ய பயன்படுகிறது.