ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பழைய பொருட்கள் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் துவாடா என்ற இடத்தில் காகிதம் உள்ளிட்ட பழைய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. வெயிலின் தாக்கத்தால் தீ கிடங்கு முழுவதும் பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.