இந்தியாவின் 2-வது அலையாக கொரோனா மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. நாளொன்றுக்கு ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிக அளவில் பரவி கொண்டு வருகின்றது. கொரோனா மீண்டும் அதிகரிப்பதற்கு மத்திய அரசின் தவறான கொள்கைகளே காரணம் எனவும், சிறந்த பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளாமல் ஆணவத்துடன் செயல்படுவதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசின் மீது பெரும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் சுகாதாரத்துறை திணறுகின்றது. இந்த நோயிடமிருந்து பொது மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றி மத்திய மாநில அரசுகளும் பல்வேறு முறையில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த நிலைக்கு மத்திய அரசின் தவறான கொள்கைகளே காரணம் என ராகுல் காந்தி குற்றம் கூறுகின்றார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் ராகுல் காந்தி கூறியது என்னவென்றால், மத்திய அரசின் தோல்வியடைந்த கொள்கைகளே கொரோனாவின் இரண்டாவது அலைக்கு முக்கிய காரணமாக வழிவகுத்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மக்களுக்கு தகுந்த அளவு பணம் செலுத்த வேண்டும். அன்றாடும் உழைக்கும் சாதாரண மனிதர்களுக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் இந்த இரண்டுமே முக்கியமானதாகும். ஆனால் ஆணவம் அதிகமாக கொண்ட இந்த அரசிடம், சிறந்த பரிந்துரைகளை ஏற்பதில் ஒவ்வாமை காணப்படுகின்றது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.