மாடுகளுக்கு கட்டி இருக்கும் கொட்டகைக்குள் 500கிலோ எடை கொண்ட முதலை புகுந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்புக்கு அடுத்துள்ள வீரமுடையாந்தம் என்ற கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டு பக்கத்தில் கொட்டகை அமைத்து அதில் மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் காலையில் மாடுகளுக்கு தீனி போடுவதற்கு கொட்டகைக்கு சென்ற ஆறுமுகம் மாடுகள் கட்டி வைத்திருந்த இடத்திற்கு பக்கத்தில் முதலை ஒன்று இருந்ததை பார்த்தது அதிர்ச்சி அடைந்தார். இந்த செய்தியானது அதற்குள் அந்த கிராமத்தில் உள்ள பொது மக்கள் மற்றும் இளைஞர்களுக்கு தெரிந்து விட்டது.
அதனால் உடனே அந்த முதலையை காண அங்கு ஏராளமான மக்கள் குவிந்தனர். இதனையடுத்து ஆறுமுகம் போலீசாருக்கு அளித்த தகவலின் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதன் பிறகு நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சுமார் 500 கிலோ எடை கொண்ட அந்த முதலையை போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து கயிறு கட்டி பிடித்து விட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் அளித்த தகவலின் படி அங்கு சென்ற சிதம்பரம் வனத்துறையினர் அந்த முதலையை பிடித்து வக்ரமாரி என்ற ஏரியில் விட்டனர் .