Categories
கிரிக்கெட் விளையாட்டு

நிதிஷ் ராணா-ராகுல் திரிபாதி…! ஜோடியின் வெறித்தனமா ஆட்டம்… 188 இலக்காக நிர்ணயித்த கேகேஆர் …!!!

நிதிஷ் ராணா-ராகுல் திரிபாதி ஜோடியின்  அதிரடியான ஆட்டத்தால் கொல்கத்தா அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

14வது ஐபிஎல் போட்டியில் ,3வது லீக் ஆட்டமானது, இன்று சென்னை எம் .ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்ததால் ,முதலில் கொல்கத்தா அணி பேட்டிங்கில்  களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான நிதிஷ் ராணா –  ஷுப்மான் கில் ஜோடி களமிறங்கியது.

ஷுப்மான் கில் 15 ரன்களில் ஆட்டமிழக்க ,அடுத்து ராகுல் திரிபாதி களமிறங்கினார். நித்திஷ் ராணா- ராகுல் திரிபாதி ஜோடி இணைந்து, அதிரடியான ஆட்டத்தை காட்டியது. இருவரும் ஹைதராபாத்தின் பந்து  வீச்சுக்களை துவம்சம் செய்தனர். 15.2 ஓவர்களில்  146 ரன்களை எடுத்து இருக்கும்போது திரிபாதி 53 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் கொல்கத்தா அணி சுலபமாக 200 ரன்களை தாண்டிவிடும் என்று நிலையில் இருந்தது. ஆனால் இந்த நிலை தலைகீழாக மாறியது.

அந்த்ரே ரஸலை 5 ரன்களில் ரஷித் கான் வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து மோர்கனை 2 ரன்களிலும் நிதிஷ் ராணாவை  80  ரன்களிலும் முகமது ரபி வீழ்த்தினார். இதனால் கொல்கத்தா அணியின் ரன் ரேட் குறைந்துகொண்டே வந்தது. இறுதியில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 9 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை எடுத்தது. தற்போது களமிறங்கியுள்ள ஹைதராபாத் அணி 188 ரன்களை இலக்காகக் கொண்டு பேட்டிங் செய்து வருகிறது.

Categories

Tech |