Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளி செல்லும் குழந்தைகள் பாதிப்பு ” வெறி நாய் கடி” பொதுமக்கள் பீதி !!..

சென்னை  அடுத்த  ஊரப்பாக்கத்தில் பள்ளி  செல்லும்  குழந்தைகளை  தெருவில்  சுற்றும்  நாய்கள்  கடித்து  குதறுவதால்  மக்கள்  பீதியில்  உறைந்துள்ளனர் 

சென்னை  ஊரப்பாக்கத்திற்கு  உட்பட்ட  எம்ஜிஆர்  நகர் ,அருள் நகர்  மற்றும்  ஐயன்சேரி  உள்ளிட்ட  இடங்களில் வெறிநாய்கள்  தொல்லை அதிகரித்து கொண்டுள்ளதாக புகார்கள்  எழுந்துள்ளன . பள்ளி செல்லும்  குழந்தைகளை வெறிநாய்கள்  குறிவைத்து  கடிப்பதால்  பெற்றோர்கள்  அச்சத்தில்  உள்ளனர் . தெருவில்  சுற்றும்  நாய்கள்  மற்ற  நாய்களை  கடித்துவிடுவதால்  நாளுக்கு  நாள்  பாதிப்புகள்  அதிகரித்துக்கொண்டு  செல்வதாக  பொதுமக்கள் வேதனையில்    தெரிவிக்கின்றனர்  .

தெருவிற்கு  10 நாய்கள்  இருப்பதால்   வீட்டைவிட்டு  வெளியில் செல்வதற்கு  தயங்குகின்றனர் . இரண்டு நாட்களுக்கு  முன்பு வெறிநாய்  கடித்து  மாடு உயிர்  இழந்ததையும்  வருத்தத்துடன்  தெரிவிக்கின்றனர் .மேலும்  வெறிநாய்கள்  தொல்லை  குறித்து  ஊராட்சி   நிர்வாகத்தில்  புகார்  அளித்தும்  எந்தவிதமான  நடவடிக்கை  எடுக்கவில்லை  என  பொதுமக்கள்  புகார்கள் தெரிவிக்கின்றனர். தெருவில்  சுற்றும்  வெறிநாய்களை  பிடித்து  தடுப்பூசி  போடுவதுடன்  நாய்களின்  இனப்பெருக்கத்தையும்  கட்டுப்படுத்த வேண்டும்  என்று  கோரிக்கை  விடுகின்றனர்.

Categories

Tech |