14ஆவது ஐபிஎல் சீசன் சீசனின் மூன்றாவது போட்டி இன்று சென்னையில் உள்ள MA.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் பீல்டிங் தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
புவனேஷ்குமார் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் 4அடித்து ஹைதராபாத்தை மிரளவைத்த நிதீஷ் ராணா அடுத்தடுத்து அதிரடி காட்டினார். இதனால் அணியின் ஸ்கோர் 6ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51ரன்னாக உயர்ந்தது. அணியின் ஸ்கோர் 59ஆக இருந்த போது, ரஷீத் கான் பந்தில் சுமன் கில் 15ரன்னில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய ராகுல் திரிபாதி – ராணாவோடு ஜோடி சேர்ந்தார். இருவரும் தொடர்ந்து ஆடி வரும் நிலையில் கொல்கத்தா அணி 15ஓவர்களில் 2விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. திரிபாதி 29பந்துகளில் 53 ரன் எடுத்து ஆட்டமிழக்க, ராணா 51 ரன்னுடனும்,களத்தில் ஆடி வருகின்றனர்.