நடிகர் அஜித்தின் பிறந்தநாளில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகவுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடித்துள்ளார்.
வலிமை அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களுக்கு வருகிற மே 1 அஜித் பிறந்தநாளன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் அதே நாளில் மோஷன் போஸ்டர் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.