Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேசிய சட்டப்பணிகள் ஆணையம் உத்தரவுப்படி… மக்கள் நீதிமன்றத்தில்… தீர்வு காணப்பட்ட வழக்குகள்..!!

சிவகங்கை மாவட்டத்தில் 105 வழக்குகளுக்கு தேசிய மக்கள் நீதி மன்றம் மூலம் தீர்வு காணப்பட்டது.

தமிழக மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படி தேசிய மக்கள் நீதிமன்றம் சிவகங்கை மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு மாவட்டத்தில் நிலுவையில் உள்ள சமரச குற்றவியல் வழக்குகளும், சிவில் வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும் பத்து மக்கள் நீதி மன்றங்கள் அமைக்கப்பட்டது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. முதன்மை மாவட்ட நீதிபதியும், சிவகங்கை சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சுமதிசாய்பிரியா, கூடுதல் மாவட்ட நீதிபதி சத்திய தாரா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி கருணாநிதி, குடும்ப நல நீதிபதி தமிழரசி, மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி சரத்ராஜ், சார்பு நீதிபதி மோகனா, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி உதய வேலவன், குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதி, மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன் மற்றும் வக்கீல்கள் ராதாகிருஷ்ணன், ராம் பிரபாகர், நாகேஸ்வரன், ஜானகிராமன் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.

இந்த நீதிமன்றத்தில் 38 காசோலை மோசடி வழக்குகள், 102 குற்றவியல் வழக்குகள், 1,026 வங்கிக்கடன் வழக்குகளும், 26 குடும்ப பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகளும், 377 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்கு, 290 சிவில் வழக்கு என மொத்தம் 1,860 வழக்குகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் சமரச தீர்வு 97 வழக்குகளுக்கு காணப்பட்டது. இதன் மூலம் அவர்களுக்கு ரூ.3 கோடியே 97 லட்சத்து 41 ஆயிரத்து 850 கிடைத்தது. இதே போல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட வழக்குகளில் 250 வழக்குகளுக்கு பரிசீலனை வழங்கப்பட்டது. அதில் 8 லட்சத்து 85 ஆயிரத்து 20 பணம் 8 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு வங்கிகளுக்கு வரத்தானது. இதற்கான ஏற்பாடுகளை ஆணைக்குழு நிர்வாக உதவியாளர்கள் பானுமதி, கோடீஸ்வரன், விவேகானந்தன், மணிமேகலை ஆகியோர் செய்திருந்தனர். இதில் மொத்தம் 105 வழக்குகளுக்கு சமரசமாக தீர்வு காணப்பட்டது.

Categories

Tech |