உப்பு -தேவையான அளவு
செய்முறை :
கேரட் ,வெங்காயம் ,குடைமிளகாய் மூன்றையும் சிறுதுண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும் . கடலை மாவுடன் சிறிது உப்பு சேர்த்து பஜ்ஜி மாவுப் பதத்துக்கு கரைத்துக் கொள்ள வேண்டும். முட்டையில் வெள்ளைக் கருவை மட்டும் தனியாக அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ரொட்டித் துண்டுகளை கடலை மாவில் நனைத்து அதன் மேல் இரண்டு புறமும் காய்கறி துண்டுகளை தூவ வேண்டும். காய்கறியின் மேல் வெள்ளைக் கருவை தடவி தோசைக் கல்லில் ஆம்லெட் போல வேக வைத்து எடுத்தால் சுவையான பிரெட் ஆம்லெட் தயார் !!!