தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் தற்போது இருந்தே வெயிலின் தாக்கம் ஆரம்பித்து விட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அதில், “ஏப்ரல் 13இல் தென்தமிழகம் மற்றும் வடக்கு தமிழக மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 14 மற்றும் 15-இல் நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்” என்றும் தெரிவித்துள்ளது.