Categories
உலக செய்திகள்

இரண்டு கட்சிகளுக்கிடையே விரிசல்…. மே தினம் தனியா கொண்டாடுவோம்…. எடுக்கப்பட்ட முடிவு….!!

இலங்கையில் இரண்டு கட்சிகளுக்கிடையே விரிசல் ஏற்பட்டுள்ளதால் மே தினத்தை தனியாக நடத்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முடிவெடுத்துள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையில் பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வருகின்ற மே தினத்தை தனியாக நடத்திக்கொள்ள முடிவெடுத்துள்ளது. மேலும் இந்த முடிவானது கட்சியின் தொழிற்சங்கங்களும் செயற்பாட்டாளர்களின் கோரிக்கைக்கும் ஏற்ப எடுக்கப்பட்டிருக்கிறது.

இதனை சிரேஷ்ட உதவியாளரான பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான இறுதி முடிவு விரைவாக எடுக்கப்படவுள்ளது. அதனைத்தொடர்ந்து மே தினம் சிறப்பானதாக நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சினுடைய இந்த தனி பயணமானது பொதுஜன பெரமுன கட்சிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கருதப்பட்டுள்ளது.

Categories

Tech |