நெல்லையில் வாலிபர் வாகனம் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் மாரி வசந்த் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் மாரி வாசந்த் பாளையங்கோட்டை பக்கத்தில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த வாகனம் திடீரென்று அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மாரி வசந்த் படுகாயமடைந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.