Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஒரே நாள்ல 3,317 வழக்கிற்கு தீர்வு…. மக்கள் நீதிமன்றம்…. திருநெல்வேலி மாவட்டம்….!!

நெல்லையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 3,317 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்திலிருக்கும் நீதிமன்றத்தில் தேசிய சட்டப் பணி ஆணைக்குழுவின் உத்தரவின்பேரில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் நெல்லை முழுவதும் 9 தாலுக்காவில் அமைக்கப்பட்ட 19 அமர்வுகளில் நீதிபதி விசாரணை நடத்தினார். இந்த லோக் அதாலத்தில் மொத்தமாக 3,317 வழக்கிற்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து கோர்ட்டில் நிலுவையிலிருக்கும் குடும்ப வழக்குகள், சமரச குற்றவழக்கு, மோட்டார் விபத்து வழக்கு, உள்ளிட்ட மொத்தமாக 3,281 வழக்கிற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் 11,41,94,958 சமரச தொகையை வழங்கி முடித்துள்ளது. மேலும் இந்த மக்கள் நீதிமன்றத்தில் பல முக்கிய நீதித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Categories

Tech |