காஞ்சிபுரத்தில் அ.தி.மு.க சார்பில் நீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழகத்தில் தற்போது கோடை காலம் நிலவுகிறது. இதனால் அனைத்து பகுதிகளிலும் வெயில் 100°யை தாண்டி சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் மதிய வேளையில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அனல் காற்று வீசுவதால் மிகவும் அவதியுறுகிறார்கள்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்தமமேரூரிலிருக்கும் பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க சார்பில் நீர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை அ.தி.மு.க காஞ்சிபுரம் மாவட்ட செயலாளரான சோமசுந்தரம் திறந்து வைத்தார். இதில் பொதுமக்களுக்கு தர்பூசணி,மோர்,இளநீர் முதலானவற்றை வழங்கபட்டது. இதனையடுத்து இவ்விழாவில் அ.தி.மு.க செயலாளர்களும், தொண்டர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.