Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வீட்டு வாசலில் காத்திருந்த அதிர்ச்சி…. பீதியை கிளப்பும் முட்டை…. பயத்தில் கிராம மக்கள்….!!

அம்மாவாசையின் போது வீட்டு வாசலில் மந்திரித்த முட்டை இருந்ததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பொன்பாடி பகுதியில் தட்சிணாமூர்த்தி-பொன்னியம்மாள் என்ற தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு சுஜாதா, பொற்கொடி, வினோத் குமார் என மூன்று பிள்ளைகள் இருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இவர்களது வீட்டு வாசல் முன்பாக அமாவாசை நாளன்று மாந்திரகத்தில் பயன்படுத்துவது போல படங்கள் வரைந்து மஞ்சள் குங்குமம் இட்ட மந்திரித்த முட்டை ஒன்று இருந்துள்ளது. இதனைக் கண்ட தட்சிணாமூர்த்தியும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இது போன்ற சம்பவம் அடுத்து வரும் நாட்களில் தொடர்ந்து நடைபெற்று வந்ததால் அவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

அந்த முட்டையை தட்சிணாமூர்த்தியின் மகளான சுஜாதா தொட்டவுடன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு திடீரென உயிரிழந்துள்ளார். அதற்கு முன்பு வரை சுஜாதாவிற்கு எந்த நோய் நொடியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த மந்திரித்த முட்டையை வாசலில் வைத்த நாள் முதலே தட்சிணாமூர்த்தியின் வீட்டில் உள்ள அனைவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போவது வழக்கமாகியுள்ளது. இதேபோன்று அந்த ஊரில் இன்னும் சிலர் வீட்டு வாசலிலும் மந்திரித்த முட்டை இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் அந்த ஊரில் இருப்பதால் வேண்டாமா என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்கும்போது “இவ்வாறு நடைபெறும் சம்பவங்களால் நாங்கள் மிகவும் பயந்திருக்கிறோம். எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இந்த முட்டையை யார் எங்கள் வீட்டு வாசலில் வைத்திருப்பார்கள் என்று தெரியவில்லை. அதனால் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளோம். ஆனால் எந்தவித ஆதாரமும் இல்லாததால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளனர்” என்று அவர்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |