குப்பை போடுவதை தடுக்கும் விதமாக அந்த இடத்தில் நடராஜர் சிலை வைக்கப்பட்ட பின்பும் குப்பை போடுவதாக தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் மாநகர சபைக்கு முன்பாக நல்லூர் பானாங்குளம் அமைந்துள்ளது. அதை சுற்றி தொண்டு நிறுவனங்களும் குடியிருப்புகளும் அமைந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் வெளியிலிருந்து வரும் சில நபர்கள் அந்த இடத்தில் குப்பைகள் போடுகின்றனர். இதனை தடுக்க பல தரப்பினரும் முயற்சி செய்துள்ளனர். மேலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும் இதனை யாராலும் தடுக்க முடியவில்லை.
அதனால் குப்பைகள் வீச படுவதை தடுப்பதற்காக குப்பை போடும் இடத்தில் நடராஜ பெருமானின் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அப்படி சுவாமி சிலை இருக்கும் போது யாரும் குப்பைகளை போட மாட்டார்கள் என நினைத்து அவ்வாறு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் சிலர் நடராஜ பெருமானின் சிலை நிறுவப்பட்ட பின்பும் அந்த இடத்தில் குப்பைகளை வீசிக் கொண்டே இருக்கின்றனர்.