சென்னையில் நேற்று நடைபெற்ற 3 வது லீக் போட்டியில் ,கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ,ஹைதராபாத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது .
14வது ஐபிஎல் போட்டியில் ,3வது லீக் ஆட்டமானது, இன்று சென்னை எம் .ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங்கை தேர்வு செய்ததால் ,முதலில் கொல்கத்தா அணி பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான நிதிஷ் ராணா – ஷுப்மான் கில் ஜோடி களமிறங்கியது.ஷுப்மான் கில் 15 ரன்களில் ஆட்டமிழக்க , நித்திஷ் ராணா- ராகுல் திரிபாதி ஜோடி இணைந்து, ஹைதராபாத்தின் பந்து வீச்சுக்களை துவம்சம் செய்தனர்.
இதன் பிறகு திரிபாதி 53 ரன்கள் ,அந்த்ரே ரஸல் 5 ரன்கள் மற்றும் மோர்கன் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர் . நிதிஷ் ராணா 80 ரன்களில் ஆட்டமிழக்க ,இறுதியில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 9 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை எடுத்தது.இதன் பின் ஹைதராபாத் அணி 188 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது .ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக விருத்திமான் சாஹா -டேவிட் வார்னர் ஜோடி களமிறங்கியது. இதில் டேவிட் வார்னர் 3 ரன்கள் மற்றும் சாஹா 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 10 ரன்னிற்குள் ஹைதராபாத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதற்கடுத்து களமிறங்கிய மனிஷ் பாண்டே- பிரஸ்டோ ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பிரஸ்டோ அரை சதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து 92 ரன்கள் எடுத்த நிலையில் பிரஸ்டோ 55 ரன்னில் அவுட்டானார். இதற்கடுத்து களமிறங்கிய முகமது நபி 14 ரன்கள், விஜய் சங்கர் 11 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்கள். கடைசி 2 ஓவரில் 38 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஹைதராபாத் அணி இருந்தது. இதில் மனீஷ் பாண்டே 19-வது ஓவரில் 2 சிக்சர்களை அடித்து, 16 ரன்கள் எடுத்து அரை சதமடித்தார்.இறுதியில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணி தோல்வியை சந்தித்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் போராடிய மனிஷ் பாண்டே 61 ரன்கள் எடுத்தார். எனவே 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றியை கைப்பற்றியது.