நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அனைத்து அமைச்சர்களுடனும் அவசர ஆலோசனை நடத்த இருக்கிறார். இதில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.