ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவருமே முடி கொட்டுதல் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர். முடி கொட்டுதல் பிரச்சினைக்கு பல்வேறு மருந்துகள் இருந்தும் சரியான தீர்வு கிடைப்பதில்லை. ஆண்களுக்கு முடி கொட்டுவதால் வழுக்கை பிரச்சனை ஏற்படுகிறது. இந்நிலையில் முடி கொட்டுவதை தடுப்பதற்கான சிறந்த மருந்து இருக்கிறது. அது என்னவென்று பார்க்கலாம். முடி கொட்டுவதை தடுக்க ஆவாரம் பூ மிகச்சிறந்த மருந்தாகும்.
தேவையானவை:
செம்பருத்திப்பூ.
தேங்காய் பால்.
ஆவாரம் பூ.
இவை மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். இதை வாரத்திற்கு மூன்று முறை முடியில் தேய்த்து ஊறவைத்து குளித்து வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். உடலும் குளிர்ச்சியடையும். கூந்தலும் நன்கு வளர்ச்சியடைய உதவும்.