நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது. தடுப்புசி குறித்த கேள்விகளுக்கு 044-25384520 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். மேலும் தடுப்பூசி நோயை ஏற்படுத்தும் கிருமியை கொண்டிருக்கவில்லை. தடுப்பூசி பயன்படுத்தினால் covid-19 நோய் கிருமிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.