தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு டாஸ்மாக் ஊழியர்கள் கடிதம் எழுதியுள்ளனர்
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளம் கடிதம் எழுதியுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. டாஸ்மாக்கில் தொடர்ந்து கூட்டம் கூடுவதால் ஊழியர்களுக்கு நோய் பரவுகிறது. 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.இதனால் விற்பனை நேரத்தை பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை குறைத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்..