நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஊரடங்கு ஒரு தீர்வாகாது. வைரஸ் பாதிக்கப்பட்டாலும் மக்கள் ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு பதிலாக தங்களுடைய வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் மருத்துவமனை படுக்கைகளை மிகவும் மோசமான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்காக விட்டு வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.