Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட நபர் உயிரிழப்பு – பெரும் அதிர்ச்சி…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை திருவல்லிகேணியை சேர்ந்தவர் ஏழுமலை(39) என்பவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் நேற்று முன்தினம் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட ஏழுமலை உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |