Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலைய முடிச்சிட்டு வீட்டுக்கு போறவருக்கு இப்படியா நடக்கணும்…. தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் வாகனம் மோதியதில் ஓட்டல் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓட்டல் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த புகாரி என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் ஹோட்டலில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது இவரது மோட்டார் சைக்கிளின் அருகே வந்த வாகனம் புகாரியின் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதிவிட்டு நிற்காமலும் சென்றது.

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு இச்சம்பவம் குறித்து தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |