தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி மட்டும் டாப் மற்றவர்கள் எல்லோரும் டூப் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில் மொத்தம் 234 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதற்கு முன்னதாக தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவியது. இரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்துவந்தனர். அதுமட்டுமன்றி மக்களை கவரும் வகையிலான பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளனர்.
இதனையடுத்து தங்கள் கட்சித் தலைவர்களை அக்கட்சியின் தொண்டர்கள் புகழாரம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் அதிமுகவின் ஹீரோ எடப்பாடி பழனிசாமி தான். அவர் மட்டும் டாப் மற்றவர்கள் எல்லோரும் டூப் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். பொது மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் குடிநீர் வழங்கப்படுகிறது. இதுபோன்ற பல நல்ல திட்டங்களை மக்களுக்காக சிந்திப்பவர் எடப்பாடி பழனிசாமி தான் என்று அவர் புகழாரம் பேசியுள்ளார்.