Categories
தேசிய செய்திகள்

உரம் விலை உயர்வு… மத்திய அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை…!!!

மத்திய அரசு உரம் விலை உயர்வை திரும்ப பெறாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என டெல்டா விவசாய சங்கத் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் டிஏபி காம்ப்ளக்ஸ் உரங்களுக்கான மானியத்தை நிறுத்தியதால் விலை உயர்வை மூட்டைக்கு 700 ரூபாய் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. கடந்த மாதம் 1,200 ரூபாய்க்கு விற்கப்பட்ட 50 கிலோ உரம் தற்போது ரூ. 1,900 ஆக உயர்ந்துள்ளது. அதனைப் போலவே அனைத்து உரங்களின் விலையும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் சீர்குலைந்து விவசாய தொழிலையே விட்டு வெளியேறுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விலையேற்றத்தின் காரணமாக அனைத்து உணவு தானியங்கள் மற்றும் காய்கறி விலைகள் கடுமையாக உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உரங்களின் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என டெல்டா விவசாய சங்க தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகளுக்கான இடு பொருட்களின் விலையை உயர்த்தி நிறுவனங்களே நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்று அனுமதி வழங்கி ஆண்டுதோறும் டி ஏ பி, காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்களின் விலையை பல மடங்கு உயர்த்தி வருகிறார்கள். இதனை உடனடியாக கைவிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

 

Categories

Tech |