தமிழகத்தில் இன்று முதல் பேருந்துகள் மற்றும் வாகனங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு பொரோனோ பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதனால் தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இருந்தது போலவே கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அதனால் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணம் செய்கிறார்களா என்று கண்காணிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் பேருந்துகள் மற்றும் வாகனங்களில் கூட்டமாக வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு இறக்கி விடப்படுவர். வாகன ஓட்டிகள் முக கவசம் அணியாமல் வந்தால் அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.