கனடாவின் விஸ்லர் நகரில் உருமாறிய பிரேசிலில் கண்டறியப்பட்ட தொற்று மிக தீவீரமாக பரவி வருவதால் நகரம் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது.
மேற்கு கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இருக்கும் விஸ்லர் பகுதியில் தற்போது மிக தீவிரமாக பிரேசில் வைரஸ் பரவி வருகிறது. ஆனால் மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி தற்போது வரை சுற்றுலாவிற்கான முழு ஏற்பாடுகளும் தடை செய்யப்பட்டிருக்கிறது. மேலும் சுமார் 200 நபர்களுக்கு இப்பகுதியில் அபாயகரமான பிரேசில் தொற்று ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் பிரேசில் தொற்று கொலம்பியா மாகாணத்தில் சுமார் 877 நபர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இதில் அதிகமாக இளைஞர்கள் தான் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் நிபுணர்கள் இந்த பகுதியில் திடீரென்று தொற்று பரவுவதற்கு என்ன காரணம்? என்று குழப்பமடைந்துள்ளனர். அதாவது பிரேசில் தொற்று பரவிய முதல் 84 நபர்களில் யாரும் விஸ்லர் பகுதியிலிருந்து பிற நாடுகளுக்கு செல்லவில்லை.
மேலும் சில நபர்களுக்கு கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸ் எடுத்துக் கொண்ட பிறகு தான் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் உலகில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் இங்கு வந்து செல்வதால் தான் பரவுகிறது என்று மக்கள் கூறுகின்றனர்.