Categories
லைப் ஸ்டைல்

வெயிலுக்கு ஏற்ற வெள்ளரி… தினமும் ஒன்னு தவறாம சாப்பிடுங்க… உடலுக்கு எவ்வளவு நல்லது…!!!

கோடைக்காலத்தில் உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களுக்கு அருமருந்தாக அமையும் வெள்ளரியை தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது

சில பழங்கள் மற்றும் காய்களில் இயற்கையாகவே அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. அவ்வாறு வெள்ளரிக்காயில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். வாயின் மேற்பகுதியில் ஒரு வெள்ளரி வில்லையை வைப்பதன் மூலம் வாய் துர்நாற்றத்திற்கு காரணமான பாக்டீரியாக்களை அழிக்க முடியும். துர் நாற்றத்திற்கு காரணமாக கூடுதல் வயிற்று வெப்பத்தை வெள்ளரி விடுவிக்கிறது. வாய்க்கு புத்துணர்வை தருகிறது. வெள்ளரி சாறு உடலுக்கு புத்துணர்வு அளிப்பதுடன் பாதிக்கப்பட்ட ஈறுகளையும் குணப்படுத்துகிறது. இதனால் புத்துணர்வு சுவாசத்தை உணர முடியும். அதனால் இதனை தவறாமல் சாப்பிடுங்கள்.

வெள்ளரி சாறு தொடர்ந்து குடித்து வந்தால் வாயுத் தொல்லை, குடற் புண் மற்றும் வயிற்று எரிச்சல் ஆகியவை குணமாகும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் கொழுப்பை குறைக்கும் சக்தி வெள்ளரிக்கு உண்டு. சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் ஏற்ற வெள்ளரி விதையை தயிருடன் கலந்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும். வெள்ளரியை பச்சையாக சாப்பிடுவதே மிகவும் நல்லது.

 

Categories

Tech |