தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் உருவான இரண்டு புயல்களால் பெரும்பாலான இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அப்போது மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு வறண்ட வானிலை நிலவியது. தற்போது ஒரு சில இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனையடுத்து தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் பெரம்பலூர் ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் காவிரி டெல்டா மாவட்டங்கள், நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி, கோவை, நீலகிரி,திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் வெப்பச் சலனம் மலை அடுத்த இரண்டு வாரங்களுக்கு தொடர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.