புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 7 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதன் காரணமாக தொற்று பரவுவதை தடுப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பொது இடங்களில் சமூக இடைவெளிகளை கடைப்பிடிப்பது மற்றும் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டும், போன்ற நடவடிக்கைகள் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது ஒரே நாளில் 7 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் புதுக்கோட்டையிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.