பங்குனி மாத அமாவாசை யாகம் சிவகங்கை மாவட்டம் கீழ வெள்ளூர் கிராமத்தில் உள்ள அகோர காளியம்மன் கோவிலில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழ வெள்ளூர் கிராமத்தில் சிறப்பு வாய்ந்த ஜெயம் தரும் அகோர காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கோவில் நிர்வாகி மணிகண்டன் குருக்கள் தலைமையில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் சிறப்பு பூஜைகள் உலக நன்மைக்காக நடைபெறும். திருப்புவனத்தை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் யாக பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
அதன்படி பங்குனி மாத அமாவாசை பூஜை நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு யாக பூஜை ஜெயம் தரும் அகோர காளியம்மனுக்கு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது.