தமிழ் திரையுலக நடிகரும் தயாரிப்பாளருமான குமரராஜன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் நடிகரும் தயாரிப்பாளருமான குமரராஜன் நாமக்கல்லில் உள்ள அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் சந்தித்ததும் சிந்தித்ததும் என்ற படத்தை தயாரித்து நடித்துள்ளார். மேலும் துப்பார்க்குத் துப்பாய, ரெண்டுல ஒன்னு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்நிலையில் குமர ராஜன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.