Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் ரூ.2000 நிவாரண உதவி… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000 நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.

ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா கால சிறப்பு நிவாரண உதவியாக நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு சிறப்பு உதவித் தொகையாக இது வழங்கப்படும். மொத்தம் 6810 கலைஞர்களுக்கு தலா 2 ஆயிரம் வழங்க ஒரு கோடியே 36 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாட்டுப்புற கலைஞர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |