புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கட்டுமாவடி பகுதியில் சரியக்குட்டி என்பவர் வசித்து வந்தார். இவர் கடைவீதி தெருவில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது கலக்கமங்கலம் பகுதியில் வசிக்கும் விஜய் என்பவர் வந்து கொண்டிருத்த மோட்டார் சைக்கில் எதிர்பாரத விதமாக சரியக்குட்டி மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சரியக்குட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த விஜயை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து விபத்தில் இறந்த சரியக்குட்டியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இந்த விபத்தை ஏற்படுத்திய விஜய் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.