Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களில் ரூ.2.12 லட்சம் வசூல்… காவல்துறை அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா விதிகளை பின்பற்றாதவர்களிடம் 2 நாட்களில் 2.12 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.

ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதனால் சென்னையில் இரண்டு நாட்களில் மட்டும் முக கவசம் அணிந்து அவர்களிடமிருந்து ரூ.2.12 லட்சம் அபராதம் வசூலிக்க பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் உணவகம் மற்றும் ஷாப்பிங் மால் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கண்காணிக்க படுவதாகவும் கூறியுள்ளது.

Categories

Tech |