சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.
பங்குனி மாதத்தின் முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பங்குனி திருவிழா நடைபெற்ற அனைத்து கோவில்களில் சாமிகளுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றது. இதையடுத்து தற்போது பங்குனி மாதம் நிறைவு பெறவுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோவில் உள்ளது.
அந்த கோவிலில் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் முத்துவடுகநாதர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகங்களும் நடைபெற்றது. மேலும் தங்க அங்கியில் மலர் மாலைகளுடன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.