கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சைக்கு பாலியல் தொல்லை பற்றி பரபரப்பு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் கூகுள் நிறுவன ஊழியர்களை 500 பேர், பாலியல் புகார் தரும் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு தருவதற்கு பதில் தொல்லை தருபவரை காப்பாற்றுவதை நிறுத்துங்கள் என பரபரப்பு கடிதம் ஒன்றை அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு எழுதியுள்ளனர். கூகுள் அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் ஆகிய நிறுவனங்களில் பாலியல் தொந்தரவு குறித்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராடியும் பயனில்லை என தெரிவித்துள்ளனர்.