Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு?… முதல்வர் அவசர ஆலோசனை… சற்று நேரத்தில் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி 12 மணிக்கு முதல்வர் பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.

ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இரண்டு நாட்களாக புதிய உச்சத்தை தொட்டுள்ளதால், கொரோனா கட்டுப்பாட்டு பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், தலைமை செயலாளர் மற்றும் சுகாதாரத் துறையினர் உடன் 12 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். இதில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கும், டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |