ஜாவா தீவின் கடற்கரையில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உருவாகி 6 பேர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்தோனேசியாவில் ஜாவா தீவில் சனிக்கிழமை மதியம் சுமார் 2 மணிக்கு 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடபடவில்லை. இந்த நிலநடுக்கம் கிழக்கு ஜாவாவில் மலாங் நகரிலிருந்து தென்மேற்கே 45 கிலோமீட்டர் தொலைவில் 50 மைல் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. இதுகுறித்து தேசிய பேரிடர் மேலாண்மை செய்தி தொடர்பாளர் ராதித்யா ஜாதி கூறியதாவது. “இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கிழக்கு ஜாவாவில் பல கிராமங்களில் இருந்து அச்சத்தினால் மக்கள் வெளியேறுகின்றனர்” என்றார்.