Categories
சினிமா தமிழ் சினிமா

இத செஞ்சா…. இன்னும் பிரபலம் ஆகி விடுவேன்…. ஏ ஆர் ரகுமான் விருப்பம்…!!!

நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலம் ஆகி விடுவேன் என்று ஏ ஆர் ரகுமான் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்சகட்ட வெற்றியைக் கண்ட இசையமைப்பாளராக இருப்பவர் ஏ ஆர் ரகுமான். ஆஸ்கர் விருதை வென்ற இவர் தற்போது 99 சாங்ஸ் என்ற படத்தின் மூலம் கதை ஆசிரியராகவும்,தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். மேலும் ஏ ஆர் ரகுமான் சினிமாவில் நடிக்க உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.

இந்நிலையில் ஏ ஆர் ரஹ்மான் இதுகுறித்து கூறியதாவது, இயக்குனராக வருவதற்கு பல காலங்கள் ஆகலாம். அதற்கு என்னிடம் இப்போது நேரமில்லை. ஆனால் நிறைய கதைகள் எழுதி வைத்துள்ளேன். கதைகள் எழுதுவதும், படங்களை தயாரிப்பதும் எளிமையாக உள்ளது. தற்போது நான் எழுதிய 99 சாங்ஸ் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே என் அடுத்த படத்தின் கதைக்குரிய முடிவை தேர்வு செய்வேன்.

மேலும் நடிப்பது குறித்து அவரிடம் கேட்ட கேள்விக்கு, எனக்கென்று சொந்த உலகம் இருக்கிறது. ஆகையால் அதிலேயே நான் இருக்க விரும்புகிறேன். ஒருவேளை படங்களில் நடித்தால் நான் இன்னும் பிரபலம் ஆகி விடுவேன். ஆகையால் நான் இசை மற்றும் கதை எழுதவே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |