ஈரான் அணுசக்தி மையத்தில் பயங்கரவாத செயல்கள் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஈரானில் உள்ள அணுசக்தி நிலையத்தை நாசப்படுத்தும் வேலைகள் நடந்ததாக அணுசக்தி அமைப்பின் செய்தி தொடர்பாளர் நேற்று கூறியுள்ளார். இது குறித்து விசாரித்த AEOI தலைவர் அலி அக்பர் சலேஹி, வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த செயல் அனு பயங்கரவாதம் மற்றும் நாசவேலை என்று தெரிவித்துள்ளார். மேலும் அணுசக்தி மையத்தில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து AEOI தலைவர் அலி அக்பர் சலேஹி அணு பயங்கரவாதத்தை மிகவும் கண்டிப்பதாக கூறியுள்ளார். எனவே பயங்கரவாதத்தை தடுக்க வேண்டும் என்றும், இந்நிகழ்வு இஸ்ரேலிய இணைய தாக்குதலின் விளைவு என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இஸ்ரேலிய பொது ஊடகங்கள் உளவுத்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டியும் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் எவ்வித கருத்துக்களும் வெளியிடவில்லை.