Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இளைஞர்களோட எதிர்காலம் என்னாகுறது… இதுக்கு வேற வழியே இல்ல…குண்டர் சட்டத்தில் கைதான வாலிபர்கள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் போதை மருந்து விற்ற வாலிபர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போதைப் பொருளுக்கு அதிகமான இளைஞர்கள் அடிமையாகி வருவதால் போதை ஊசி மற்றும் மருந்து விற்பனையில் ஈடுபடுபவர்களை பிடிக்க காவல் துறையினர் அதற்கென தனிப்படை குழு அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கண்காணிப்பின் போது போதை மருந்து விற்ற பாண்டி, விக்னேஷ், பாஸ்கர், அச்சுதன் ஆகிய 4 பேரை காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து போதை மாத்திரை மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட விக்னேஷ், பாண்டி, பாஸ்கர், அச்சுதன் ஆகிய 4 பேரின் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரியிடம் பரிந்துரை செய்துள்ளனர். அந்த பரிந்துரையின் பேரில் 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து  அவர்களிடம் அதற்கான நகலில் கையெழுத்து வாங்கி காவல் துறையினர் திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |